Weather Report Today: இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (பிப்.6) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பிப்.7ஆம் தேதி முதல் பிப்.10ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
Weather Report Today: தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு - Weather Report Today
Weather Report Today:தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Etv Bharat
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை இல்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆல்ப்ஸ் மலையில் பனிச்சரிவு - 9 பேர் பலி.!