வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பெய்யக்கூடிய மழையின் விவரங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் ( ஜுன் 08, 09) தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் ஜுன் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):
(YMCA) ஒய்எம்சிஏ நந்தனம் (சென்னை) 7 செ.மீ., அண்ணா பல்கலை (சென்னை), பூந்தமல்லீ (திருவள்ளூர்), சென்னை விமான நிலையம், கலவை (ராணிப்பேட்டை), சாய் ராம் கல்லூரி மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), அம்முந்தி (வேலூர்) ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ., திருவாலங்காடு (திருவள்ளூர்), சோளிங்கர் (ராணிப்பேட்டை), வேலூர் ஆகியவற்றில் தலா 3 செ.மீ., கோத்தகிரி (நீலகிரி), கொரட்டூர் (திருவள்ளூர்) பகுதிகளில் தலா 2 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், விருதுநகர், சதியார் (மதுரை) தலா பகுதிகளில் தலா 1 செ.மீ., என பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
இன்று (ஜுன்.08) முதல் ஜுன் 12ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.