தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் - light rain in South Coast Districts

சென்னை: கன்னியாகுமரி கடல், தெற்கு இலங்கை பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்களின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain
மழை

By

Published : Jan 16, 2021, 3:22 PM IST

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்கடலோர மாவட்டங்களின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.

நாளை தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். ஜனவரி 18,19,20 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மழைப்பொழிவு விவரம்

  • கடந்த கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவு
  • திருவாரூர் மாவட்டம், குடவாசல்-5 செமீ
  • ராமநாதபுரம், கடலாடி-4 செமீ
  • தஞ்சாவூர் மாவட்டம் மஞ்சளாறு, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், தஞ்சாவூர் மாவடம் அய்யம்பேட்டை, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஆகிய பகுதிகளில் முறையே 3 செமீ மழைப்பொழிவு இருந்தது.
  • தூத்துக்குடி மாவட்டம், வைப்பார், சூரக்குடி, கும்பகோணம், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில், ராமநாதபுரம் தொண்டி, திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி முறையே தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க:உபரி நீர் சேமிக்க தடுப்பனை கட்டும் பணி தொடங்கவில்லை: பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details