தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாளை வெப்பநிலை அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் - chennai district newsw

சென்னை : நாளை வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும், பகலில் புழுக்கமாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chennai-met-update
chennai-met-update

By

Published : Apr 19, 2021, 1:43 PM IST

வெப்பச்சலனம் காரணமாக இன்று (ஏப். 19) நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை (ஏப். 20) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, சிவகங்கை,விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஏப்ரல் 21 முதல் 23ஆம் தேதிவரை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

வெப்பநிலை முன்னறிவிப்பு

ஏப்ரல் 20 முதல் 21ஆம் தேதி வரை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.

தமிழ்நாடு புதுவையில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 80 விழுக்காடு வரை இருக்கக்கூடும் என்பதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.

தேவைக்கேற்ப குடிநீர், இளநீர், மோர், நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழ வகைகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளவும். வெள்ளை, வெளிறிய வண்ண (light colour) கதர் ஆடைகளை அணிவது சிறந்தது.

இதையும் படிங்க: நீரோடையை மீட்க ஆட்சியரிடம் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details