தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

படப்பிடிப்பு அரங்கில் திடீர் தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்! - திடீர் தீ விபத்து

சென்னை: மீனம்பாக்கத்தில் படப்பிடிப்பு அரங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.

சினிமா அரங்கில் திடீர் தீ விபத்து

By

Published : May 2, 2019, 7:25 PM IST

சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகே இயங்கி வந்த தனியார் நிறுவனம் மூடப்பட்டதால், தற்போது சினிமா அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு தளங்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில, இந்த அரங்குகளில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் பல பிரமாண்ட அரங்குகள் அமைத்து தினமும் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் படப்பிடிப்பு அரங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. படப்பிடிப்பிற்கான அரங்கு அமைக்கும் வெல்டிங் பணிகள நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மீனம்பாக்கம், சினிமா படப்பிடிப்பு அரங்கு

காட்டுத்தீ போல் பரவிய இந்த தீயால் படப்பிடிப்பு நடந்த அரங்குகள் முழுவதும் எறிந்து நாசமாகியது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கிண்டி, சானிடோரியம் ஆகிய பகுதிகளில் இருந்து நான்கு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும், தீயணைப்புத்துறையினராலும் தீயை கட்டுப்படுத்த முடியாத சூழலில், மெட்ரோ குடிநீர் வாரிய தண்ணீர் லாரிகளை வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட சினிமா அரங்குகள் தீப்பிடித்து எரிந்ததில் பலகோடி ரூபாய் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details