தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மருத்துவ மாணவி உயிரிழப்பு - சென்னையில் மருத்துவ மாணவி மர்ம மரணம்

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி திடீரென உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்க்கொண்டுவருகின்றனர்.

சென்னையில் மருத்துவ மாணவி மர்ம மரணம்!
சென்னையில் மருத்துவ மாணவி மர்ம மரணம்!

By

Published : May 1, 2020, 12:09 PM IST

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீபா(22), கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு அறுவை சிகிச்சை மருத்துவருக்கு படித்துவந்தார். மேலும் கரோனா தொற்று நாடு முழுவதும் பரவி வருவதால் சென்னையில் வைரஸ் தாக்கிய நபருக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனால் வேலை அதிகமாக இருந்ததால் பிரதீபா கடந்த 16ஆம் தேதி முதல் பெரம்பூரில் உள்ள தனது வீட்டிற்கு செல்லாமல் கல்லூரி விடுதியிலேயே தங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை பிரதீபா அறை நீண்ட நேரமாக திறக்காததால் அருகிலிருந்த மாணவர்கள் கதவை தட்டி பார்த்து பின்னர் உடைத்துள்ளனர்.

அப்போது அறையின் உள்ளே மயங்கிய நிலையில் பிரதீபா கிடந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பிரதீபாவை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சுகாதாரத் துறையும், காவல் துறையும் விசாரித்துவருகின்றன.

இதையும் படிங்க...சென்னை மாநகரில் உள்ள பள்ளியில் கரோனா மையம் - ஆட்சியர் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details