சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் திருநீர்மலை பிரதான சாலை காமராஜபுரம் பகுதியில் இஸ்மாயில் (45) என்பவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று (ஜூலை 17) காலை வழக்கம்போல் இறைச்சிக் கடையில் இருந்தார்.
கறிக்கடை உரிமையாளருக்கு கத்தி வெட்டு - பரபரப்பான சிசிடிவி காட்சிகள்! - சென்னை கறிக்கடை உரிமையாளரை சிலர் வெட்டிய சிசிடிவி காட்சிகள்
சென்னை: கறிக்கடை உரிமையாளரை முன்பின் அறிமுகமில்லாத நபர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டும், நெஞ்சை பதைபதைக்க செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கறிக்கடை உரிமையாளரை சிலர் வெட்டிய சிசிடிவி காட்சிகள்
அப்போது முன்பின் அறிமுகமில்லாத மூன்று பேர், அவரது கடைக்கு நடந்து வந்துள்ளனர். இந்நிலையில், திடிரென அந்த மூன்று பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் இஸ்மாயிலை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் இருந்த இஸ்மாயிலை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இச்சம்பவம் குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலின் அடிப்படையில் சங்கர் நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இஸ்மாயிலை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இஸ்மாயிலை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெட்ரோல் பங்க் காசாளரைத் தாக்கி பணம் பறிப்பு - திருப்பூரில் துணிகரம்!