தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

30 ஏக்கர் நிலத்தில் மருத்துவப்பயன்பாட்டினை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை மாநகர மேயர் பிரியா - Interviewed by Chennai Mayor Priya

சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 30 ஏக்கர் நிலத்தில் மருத்துவப் பயன்பாட்டிற்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர மேயர் பிரியா பேட்டியளித்துள்ளார்.

30 ஏக்கர் நிலத்தில் மருத்துவப் பயன்பாடு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்- சென்னை மாநகர மேயர் பிரியா
30 ஏக்கர் நிலத்தில் மருத்துவப் பயன்பாடு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்- சென்னை மாநகர மேயர் பிரியா

By

Published : May 18, 2022, 6:31 PM IST

சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூர் மாடம்பாக்கத்தில் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான 30 ஏக்கர் நிலம் உள்ளது. சென்னை மாநகராட்சிக்குத் தானமாக கொடுக்கப்பட்டுள்ள 30 ஏக்கர் நிலத்தில் சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி கமிஷனர் சுகன்தீப்சிங் பேடி,
தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

மாநகராட்சி நிலத்தில் செய்ய வேண்டிய திட்டப்பணிகள் குறித்து மேயர், துணை மேயர், மாநகராட்சி கமிஷனர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் ஆக்கிரமிப்புப் பகுதியில், ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சென்னை மாநகர மேயர் பிரியா கூறுகையில், ’சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான மாடம்பாக்கத்தில் உள்ள 30 ஏக்கர் நிலத்தை மருத்துவப் பயன்பாட்டுக்கு மேம்படுத்துவது குறித்து அமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்’ என்றார்.

இதையும் படிங்க:சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் - சென்னை மாநகர மேயர்

ABOUT THE AUTHOR

...view details