சென்னைபோரூரை சேர்ந்தவர் வாணி கபிலன். இவர் கே.கே நகரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று (ஜூன்.24) மாலை கே.கே நகரிலிருந்து காரில் செல்லும் போது எதிர்பாராதவிதமாக காரின் மீது மரம் விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் தூய்மையான சென்னை என்ற இலக்கை எட்டுவதற்காக ஒவ்வொரு சனிக்கிழமையும் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், தூய்மைக் கண்காட்சி நடைபெற்றது.
மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் குறித்த விளக்கங்களும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. இதனை ஏராளமான பொதுமக்களும் மாணவர்களும் பார்வையிட்டனர். தூய்மை விழிப்புணர்வு கண்காட்சியை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
மேலும் விழிப்புணர்வு பேரணியை மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பின்னர், சென்னையை தூய்மையாக பராமரிக்க ஒத்துழைப்போம் என பொதுமக்களுடன் சேர்ந்து உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மேயர் பிரியா, "சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களில் தீவிர தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது.