சென்னையைச் சேர்ந்த சாலமன் ராஜ் என்பவர் ‘ஷெல்டர் டிரஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனம் நடத்திவருகிறார். இவருக்கு குழந்தை இல்லாததால் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் முடிவுக்கு வந்துள்ளார்.
ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட 45 குழந்தைகளுக்கு வாழ்வளித்த ‘அப்பா’ - எய்ட்ஸ் குழந்தைகள்
சென்னை: ஹெச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்ட 45 குழந்தைகளுக்கு, சாலமன் ராஜ் என்ற சமூக செயற்பாட்டாளர் அடைக்கலம் கொடுத்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
hiv
அந்த வகையில் 45 ஆதரவற்ற ஹெச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இவர் அடைக்கலம் கொடுத்துள்ளார். அங்கு அவர்களுக்கு கல்வி, மருத்துவம், விளையாட்டு, கணினி பயிற்சி உள்ளிட்டவற்றை இவர் இலவசமாக வழங்கிவருகிறார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “இங்கு உள்ள ஏழு பேர் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயின்று வருகின்றனர். இன்னும் சிலர் பள்ளிகளில் பயின்றுவருகின்றனர். இவர்கள் அனைவரும் என்னை ‘அப்பா’ என அழைக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.