தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் தனியார் உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு - நடந்தது என்ன? - சென்னையில் தனியார் உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு

சென்னையில் வியாசர்பாடியில் நண்பர்களுடன் சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீரென மரணம் அடைந்தார்.

chennai  man dead by eating chicken
chennai man dead by eating chicken

By

Published : Jan 24, 2022, 3:39 PM IST

சென்னை:சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெருவைச் சேர்ந்தவர், ரஞ்சித்(22). இவர் தனியார் கல்லூரியில் பிஎஸ்.சி விஸ்காம் முடித்துவிட்டு குறும்பட இயக்குநராக இருந்து வந்தார்.

குடிபோதையில் பிரியாணி சாப்பிட்டதால் ரஞ்சித் இறந்தார் எனக்கூறப்பட்ட வந்த நிலையில் தற்போது காவல் துறை விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று (ஜனவரி 23) முழு ஊரடங்கு என்பதால், தனது நண்பர் கிரிதரன் பணிபுரியக்கூடிய மருந்தகத்திற்கு ரஞ்சித் சென்றுள்ளார்.

அப்போது ரஞ்சித் அவரது 4 நண்பர்களுடன் இணைந்து பெரவள்ளூரில் உள்ள தனியார் உணவகத்தில் சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.

குளிர்பானத்தால் மயக்கமா?

சாப்பிட்ட பின்பு குளிர்பானம் குடித்துவிட்டு ரஞ்சித் வீட்டிற்குச்சென்ற போது திடீரென தலைச்சுற்றல் மற்றும் உடல் வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் திடீரென ரஞ்சித் வாந்தி எடுத்து மயக்கமடைந்ததால், உடனே அவரது அண்ணன் விக்னேஷ் ரஞ்சித்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ரஞ்சித்தைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வியாசர்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ரஞ்சித் சிக்கன் சாப்பிட்ட பின்பு குளிர்பானம் குடித்ததால் அடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமாக உயிரிழந்தாரா எனப் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:நாடாளுமன்றத்தில் 875 பேருக்கு கரோனா- பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்குமா?

ABOUT THE AUTHOR

...view details