தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் பிரபல மாலில் பாலியல் தொழில் நடத்தியவர் கைது! - சென்னை மாலில் பாலியல் தொழில்

சென்னை: பிரபல மால் ஒன்றின் விடுதியில் பாலியல் தொழிலை நடத்திவந்த விடுதி உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார்.

crime arrest
crime arrest

By

Published : Sep 11, 2020, 12:35 PM IST

சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல மாலில் பாலியல் தொழில் நடைபெறுவதாக அமைந்தகரை காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அந்த மாலின் ஐந்தாவது மாடியில் நடத்தப்பட்டுவரும் விடுதியில் காவல் துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது 27 வயதான கொல்கத்தாவைச் சேர்ந்த பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திவருவது தெரியவந்தது.

அவ்விடத்திலிருந்து உடனடியாக அப்பெண்ணை மீட்டு காப்பகத்திற்கு காவல் துறையினர் அனுப்பிவைத்தனர். தொடர்ந்து பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவந்த விடுதியின் உரிமையாளரான அமைந்தகரையைச் சேர்ந்த பிரதீப் (29) என்பவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details