தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை - மதுரை தேஜஸ் சொகுசு ரயில் மீண்டும் இயக்கம் - ஜனவரி 10ஆம் தேதி முதல் தேஜஸ் ரயில் இயக்கம்

சென்னை: பொங்கல் தினத்தை முன்னிட்டு வருகின்ற 10ஆம் தேதி முதல் சென்னை - மதுரை இடையேயான தேஜஸ் சொகுசு ரயில் மீண்டும் இயக்கப்படும் எனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

tejas train
tejas train

By

Published : Jan 8, 2021, 3:25 PM IST

கரோனா பரவல் காரணமாக பயணிகள் வருகை குறைந்ததால் தேஜஸ் ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டது. சென்னை-மதுரை இடையே வாரத்தில் ஆறு நாள்கள் (வியாழக்கிழமை தவிர்த்து) தேஜஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணிகளின் போதிய ஆதரவு இல்லாததால், ஜனவரி 4ஆம் தேதிமுதல் நிறுத்தப்பட்டது.

பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி தேஜஸ் ரயிலை இயக்க பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். அதனை ஏற்ற தென்னக ரயில்வே நிர்வாகம், வருகின்ற 10ஆம் தேதிமுதல் தேஜஸ் ரயில் இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

அதன்படி, முதல் தர ஏசி இருக்கைப் பெட்டிகள், 12 இரண்டாம் தர ஏசி இருக்கைப் பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு மதுரை சென்றடைகிறது. மறுமார்க்கமாக மாலை 3 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு சென்னை வந்தடையும்.

சென்னையிலிருந்து மதுரை செல்லும் பாதையில் திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

இதையும் படிங்க:மயிலாடுதுறையில் உதயநிதியின் உருவ பொம்மை எரிப்பு

ABOUT THE AUTHOR

...view details