சென்னை:ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்த வசந்தா (47), மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் காவலராக பணியாற்றினார். இந்நிலையில் இவர் கருவுற்றிருந்தால் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
அப்போது மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி அன்று எழும்பூரிலுள்ள மகப்பேறு மருத்துவமனையில், கரோனா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.