தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சென்னையில் பெண்கள் விடுதியின் பெயரில் சட்டவிரோத செயல்கள்!' - chennai district news

சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் பெண்கள் விடுதியின் பெயரில் சட்டவிரோத செயல்கள் நடைபெற்றுவருவதாகக் குற்றஞ்சாட்டி தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர்கள் தங்கள் ஆய்வறிக்கையை சென்னை காவல் ஆணையரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

By

Published : Aug 10, 2021, 10:37 AM IST

சென்னை: தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் ஜமுனா ரமேஷ், சைலஜா ஆகியோர் நேற்று (ஆக. 10) சென்னை வேப்பேரியில் காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை சந்தித்து தங்களின் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் ஜமுனா ரமேஷ், "சென்னையின் புறநகர்ப் பகுதிகளான போரூர், பூந்தமல்லி, ஆவடி, தாம்பரம் பகுதிகளில் உள்ள பெண்கள் விடுதிகளில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக எங்கள் ஆணையத்திற்குத் தொடர்ச்சியான புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.

பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் விடுதிகளை ஆணையம் சார்பில் நாங்கள் ஆய்வுமேற்கொண்டோம். அங்கு பெண்கள் விடுதி என்ற பெயரில் ஸ்பா, அழகு நிலையங்கள் உள்ளிட்டவை முறையான உரிமம், அனுமதியின்றி செயல்பட்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பல்வேறு சட்டவிரோத செயல்கள் நடைபெற்றுவந்ததும் ஆய்வில் தெரியவந்தது.

பெண்கள் விடுதியின் பெயரில் சட்ட விரோத செயல்கள்
போரூரில் உள்ள ஒரு விடுதியில் நாங்கள் ஆய்வு மேற்கொண்டபோது அரசியல் கட்சிப் பிரமுகர் எனக் கூறிக்கொண்டு வந்த ஒருவர் மிரட்டி தகராறு செய்தனர். இது தொடர்பான ஆய்வறிக்கை, ஆவணங்களை காவல் ஆணையரிடம் சமர்ப்பித்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகோள்விடுத்துள்ளோம்.
விசாரணை மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் ஆணையர் உறுதி அளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details