சென்னை கீழ்ப்பாக்கத்தில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் பத்து அடுக்கு மாடிகளைக் கொண்ட பெட்டிகோரா டவர் உள்ளது. இங்கு பத்தாவது மாடியில் தனியாருக்கு சொந்தமான செல்ஃபோன் டவர் இயங்கிவருகிறது. இந்நிலையில், இன்று காலை திடீரென்று டவரின் ஜெனரேட்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
செல்ஃபோன் டவரில் தீ விபத்து - கீழ்ப்பாக்கத்தில் பதற்றம்! - chennai kilpakkam cellphone tower got fire due to generator burst
சென்னை: கீழ்ப்பாக்கத்தில் செல்ஃபோன் டவர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டவரில் தீ விபத்து
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தின்போது, காவலாளி ராஜமாணிக்கத்திற்கு டவர் அருகிலிருந்த கேபிள்களை தள்ளியபோது கை, முகம், கழுத்து பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: நூதன முறையில் சேலை வியாபாரியிடம் மோசடி - 4 பேர் கைது!
TAGGED:
Chennai fire accident