தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டிலிருந்தபடியே... இளைஞர்களுக்கு ஆசைகாட்டி மோசம் செய்த 4 பேர் கைது!

சென்னை: வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என்று கூறி இளைஞர்களிடம் நூதன முறையில் மோசடி செய்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

cheating

By

Published : Sep 20, 2019, 3:21 PM IST

படித்து முடித்தவர்கள், பகுதி நேர வேலை தேடுபவர்கள், வீட்டில் இருப்பவர்கள் என அனைவரும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யலாம் எனக் கூறி சென்னை எம்.எம்.டி.ஏ.வில் செயல்பட்டுவந்த ட்ரான்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Trans india pvt ltd.) என்ற தனியார் நிறுவனத்தை நடத்திவந்த பாண்டியன் (29), ராஜ்கமல் (26), ராஜா (24), ராஜ்குமார் (21) ஆகிய நான்கு இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

வேலை தேடிவருபவர்களிடம் தலைக்கு ரூபாய் ஏழாயிரத்து 500 முதல் அதற்கு மேற்பட்ட தொகையை வசூல் செய்து இந்த நான்கு நபர்களும் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர். இந்த நிலையில், இவர்களால் ஏமாற்றப்பட்ட நபர்கள், அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் செய்தியாளர் சந்திப்பு

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூளைமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த நான்கு பேரையும் கைது செய்து இது குறித்து விசாரித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details