தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறைக் கைதிகள், அலுவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் ஈஷா - prison officials yoga

சென்னை: தமிழ்நாடு சிறைகளில் உள்ள சிறைக் கைதிகள், சிறை அலுவலர்களுக்கு ஈஷா பவுண்டேஷன் சார்பாக யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

yoga
yoga

By

Published : Aug 11, 2020, 11:45 PM IST

தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் தண்டனை பெற்று வரும் கைதிகள், சிறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கரோனா தொற்று எளிதாக பரவ வாய்ப்புள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை நல்ல முறையில் பாதுகாக்கவும் சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் உத்தரவின் பேரில் ஈஷா பவுண்டேஷன் மூலம் யோகா பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த மாதம் 28ஆம் தேதி முதற்கட்டமாக புழல் சிறையில் உள்ள சிறைக் கைதிகள், அலுவலர்களுக்கு ஆன்லைன் மூலம் யோகா பயிற்சி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேலூர், மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி உள்பட 14 சிறைகளில் உள்ள 4 ஆயிரத்து 857 ஆண், பெண் கைதிகள் உட்பட 628 சிறை அலுவலர்களுக்கும் யோகா பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

யோகா பயிற்சி மேற்கொள்ளும் பெண் அலுவலர்கள்

இந்த பயிற்சியானது சிறை அலுவலர்களுக்கு தினமும் காலை 8 மணியிலிருந்து 9.30 மணி வரையிலும், கைதிகளுக்கு காலை 11 மணியிலிருந்து 12.30 வரை வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மூலம் சிறைக் கைதிகள், அலுவலர்கள் மிகவும் பயன்பெற்றுள்ளதாக அலுவலர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

யோகா பயிற்சி

இதையும் படிங்க:’எங்களுக்கு கரோனா இல்லை... ஆயுள் கைதி மாறி நடத்துறாங்க’

ABOUT THE AUTHOR

...view details