தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்ஸ்டாகிராமில் வீடியோ கால் செய்த கல்லூரி மாணவனிடம் பணம் பறிப்பு - Instagram Fraud

சென்னை: இன்ஸ்டாகிராமில் ஆடையில்லாமல் வீடியோ கால் செய்த கல்லூரி மாணவனை மிரட்டி பணம் பறித்த அடையாளம் தெரியாத நபரை காவலர்கள் தேடி வருகின்றனர்.

Cheat சென்னை இன்ஸ்டாகிராமில் வீடியோ கால் பணம் பறிப்பு இன்ஸ்டாகிராமில் வீடியோ கால் பணம் பறிப்பு Instagram Cheating Instagram Fraud Chennai Instagram Video Call Fraud
Chennai Instagram Video Call Fraud

By

Published : Feb 29, 2020, 5:38 AM IST

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவரும், ஓஎம்ஆர் சாலையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவன் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், "இன்ஸ்டாகிராம் செயலி மூலமாக ரியா என்ற பெண் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிருந்தார். அந்த குறுஞ்செய்தியை படித்து விட்டு அதற்கு நான் பதில் அளித்தேன்.

பின்னர் அந்தப் பெண் வீடியோ கால் செய்யுமாறு கேட்டார். அதனால், நான் முகத்தை காட்டியபடி வீடியோ கால் செய்தேன். தொடர்ந்து, அந்தப் பெண் என்னை ஆடையை கழற்றி விட்டு பேசு எனக் கூறினார்.

நானும் அவ்வாறு செய்தேன். அதனை அவர் பதிவு செய்துள்ளார். அந்த காணொலிக் காட்சியை காட்டி என்னை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்புக் கொண்டார்.

அவர் என்னிடம் பணம் கொடுக்காவிட்டால் இந்தக் காட்சிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டினார்.

புகார் அளிக்கப்பட்டுள்ள அயனாவரம் காவல் நிலையம்

அவரின் மிரட்டலுக்கு பயந்து நான் அவருக்கு ரூ.59 ஆயிரம் அனுப்பினேன். தற்போது என்னை தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்” என கூறியிருந்தார்.

இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:ரவுடி மீது புகாரளித்த அண்ணன், தம்பிக்கு கத்திக்குத்து

ABOUT THE AUTHOR

...view details