சென்னை திருவல்லிக்கேணியில் காவல் ஆய்வாளராக பணியாற்றுகிறார் சீதாராமன். இவர் ஞாயிற்றுக்கிழமை தோறும் சாலையோரங்களில் உள்ள ஆதரவற்றோருக்கும், உணவின்றி தவிப்பவர்களுக்கும் தனது சொந்த செலவில் உணவு வழங்கி வருகிறார்.
இவருடன் குற்றப்பிரிவு தலைமைக் காவலர் சுதா, காவலர் ஷீபா, சமூக ஆர்வலர் கார்த்திக் உள்ளிட்டோரும் சேப்பாக்கம் பகுதியில் சாலையோரத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வாழை இலையில் விருந்து உணவு சாப்பாடு, சாம்பார், ரசம், உருளைக்கிழங்கு பொரியல் அறுசுவை விருந்தை அளித்து, பசியாற்றி வருகின்றனர். ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவதற்காக வாரத்தில் 2,500 ரூபாய் வீதம் செலவிடும் சீதாராமன், மாதத்தில் 10 ஆயிரம் ரூபாயை தனது சம்பளத்தில் இருந்து ஒதுக்கி விடுகிறார். இவரின் இந்த சேவைக்காக யாரிடமும் பணம் கேட்பதில்லை. தனது சொந்த செலவிலேயே இந்தச் சேவையை தொடர்கிறார். ஆரம்பத்தில் 150க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கி வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக காவல் ஆய்வாளர் சீதாராமனிடம் கேட்டபோது, “வாழ்வில் நாம் செய்யும் மிக உயர்ந்த சேவையாக இதை நான் கருதுகிறேன். உணவு சாப்பிட்டுவிட்டு அவர்கள் நன்றியோடு கையெடுத்து கும்பிடும் அந்தத் தருணம் கண்ணீர் வர வைக்கிறது. அன்று முடிவு செய்தேன் என் வாழ்நாளில் இனி இச்சேவையை தொடர்வது என்று.