இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியசும் பதிவாகக் கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை செப்டம்பர் 23ஆம் தேதி கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவுகள், மத்திய கிழக்கு, வடகிழக்கு தென்கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய பகுதிகள் மகாராஷ்டிரா, குஜராத் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அதேபோல் செப்டம்பர் 23 , 24ஆம் தேதி தென்மேற்கு அரபிக்கடலில் மேற்குப் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க...கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைப்பு: ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு