தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேனர் விவகாரம்: திமுக, அதிமுக தவிர மற்ற அரசியல் கட்சிகளிடம் உயர் நீதிமன்றம் கேள்வி! - Illegai Banner Case

சென்னை: சட்டவிரோத பேனர்கள் வைக்கமாட்டோம் என திமுக, அதிமுக தவிர மற்ற அரசியல் கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல்செய்யாதது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை சட்ட விரோத பேனர் வழக்கு Chennai Illegai Banner Case சட்ட விரோத பேனர் வழக்கு பேனர் வழக்கு Illegai Banner Case
Chennai Illegai Banner Case

By

Published : Jan 27, 2020, 6:43 PM IST

சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அலுவலர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்தது தொடர்பான வழக்கு உள்ளிட்ட வழக்குகள், நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் முன்னிலையான அரசு வழக்கறிஞர், தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பது முழுமையாக தடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், சுபஸ்ரீ வழக்கில் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, சுபஸ்ரீ சம்பவத்துக்கு முன் சட்டவிரோதமாக பேனர் வைத்தது தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன? அந்த வழக்குகளின் நிலை என்ன என்பதை அறிக்கையாக தாக்கல்செய்ய தமிழ்நாடு உள் துறை செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேபோல், அரசியல் கட்சியினர் தொண்டர்களுக்கு பேனர் வைக்கக்கூடாது என அறிவுறுத்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய பிறப்பித்த உத்தரவின்படி திமுக, அதிமுக கட்சி சார்பில்தான் பிரமாண பத்திரம் தாக்கல்செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பிற கட்சிகள் ஏன் பிரமாண பத்திரங்களைத் தாக்கல்செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

பின்னர், அரசு செலவில் லட்சக்கணக்கான ரூபாய் விளம்பரங்களுக்காக செலவிடுவது தொடர்பான வழக்கில், பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுப்பது தொடர்பான கொள்கை ஏதேனும் வகுக்கப்பட்டுள்ளதா என பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சட்டவிதிகளைப் பின்பற்றி பேனர்கள் வைக்க அனுமதி கோரும் விண்ணப்பங்களின் மீது முடிவெடுப்பது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தவறினால், மாநகராட்சி துணை ஆணையரை நேரில் முன்னிலையாக உத்தரவிட நேரிடும் என அறிவுறுத்தினர். பின்னர், இந்த அனைத்து வழக்குகளின் விசாரணையை நீதிபதிகள், பிப்ரவரி 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:

பேனர் வைப்பதில் கட்டுப்பாடுகள் - சுவர் விளம்பரத்திற்கு மாறிய ரஜினி ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details