சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீப் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனது மகள் உயிரிழந்து சுமார் இரு வருடங்கள் ஆகிவிட்டது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது ஸ்டாலினை சந்தித்து முறையிட்டேன். தற்போது முதல்வராக உள்ள அவரை சந்தித்து விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன்" என்றார்.
அவரது வழக்கறிஞர் முகமது ஷா, "2019 டிசம்பரில் சிபிஐ விசாரணை துவங்கிய நிலையில், இரண்டு வருடங்கள் ஆகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. தாமதத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை. பாத்திமாவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம் என அவர் கூறினார்.