சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி சென்னை ஐஐடியில் கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கோட்டூர்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை எனக் குற்றம்சாட்டினார். பல்வேறு அரசியல் அமைப்புகள் மற்றும் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின.
செல்போன் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள பேராசிரியர்கள்
இதனிடையே, இந்த வழக்கு கோட்டூர்புரம் காவல் நிலையத்திலிருந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி மாற்றப்பட்டது.
இந்த வழக்கு மாற்றப்பட்ட பிறகும் மாணவி தற்கொலைக்குக் காரணமானவர்களும், செல்போன் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள பேராசிரியர்கள் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
'சிபிஐ குற்றவாளிகளை மறைப்பதற்குத் துணை போவதாக உள்ளது; என் மகள் பாத்திமா மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன்' இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் 3 ஐஐடி பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்களில் மாணவர்களுக்கான பிரச்னை குறித்து அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
பாத்திமா தற்கொலை வழக்கு
அதன்பிறகு பாத்திமா தற்கொலை செய்து கொண்ட வழக்கு 2019ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி சிபிஐக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ டிசம்பர் 27ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கி நடத்தி வருகின்றனர். 174 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் அடிப்படையில் (இயற்கைக்கு மாறான மரணம்) வழக்குப்பதிவு செய்து சிபிஐ அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீப் மற்றும் அவரது வழக்கறிஞர் முஹம்மது ஷா இணைந்து இன்று (டிச.30) சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
பாத்திமாவின் தந்தை மற்றும் வழக்கறிஞர் குற்றச்சாட்டு வேறொரு விசாரணைக் குழு வேண்டும்
அப்போது வழக்கறிஞர் முஹம்மத் ஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாத்திமா தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை முடிக்கப்பட்டுள்ளது என சிபிஐ சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாத்திமாவிற்கு வீட்டின் ஞாபகம் அதிகமாக இருந்த காரணத்தினால் தற்கொலையில் ஈடுபட்டதாக சிபிஐ விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
சிபிஐ நீதிமன்றத்தில் அறிக்கை ஆனால், சிபிஐ இதைத் தெரிவித்து இந்த வழக்கை முடித்தாலும் நாங்கள் இதை விட மாட்டோம். உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். அது மட்டுமில்லாமல் சிபிஐ விசாரணை இல்லாமல் வேறொரு விசாரணைக் குழுவை அமைத்து தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தை பாத்திமாவிற்கு என்ன நேர்ந்தது என அறியாமல் விடமாட்டோம்
இத்துடன் நாங்கள் விட்டு விடமாட்டோம். இரண்டு ஆண்டுகளுக்குமேல், ஆனாலும் பாத்திமாவிற்கு என்ன நேர்ந்தது என அறியாமல் விடமாட்டோம். இதற்காகத் தான் சிபிஐ விசாரணை முடித்தாலும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்.
பாத்திமா தற்கொலைக்குப் பேராசிரியர்கள் சிலர் காரணம் எனத் தகவல்கள் வெளியான நிலையில், வீட்டை விட்டுப் பிரிந்ததுதான் காரணம் என சிபிஐ கூறுவது குற்றவாளிகளை மறைப்பதற்குத் துணை போவதாக உள்ளது. எனினும் தங்கள் தரப்பில் சட்ட ரீதியாகப் போராடுவோம். சிபிஐயின் அறிக்கையைப் பெற்ற பின்னர் மேல்முறையீடு செய்ய உள்ளோம்" என்று தெரிவித்தார்.
ஐஐடி மாணவி பாத்திமாவுடன் அவரது தந்தை பாத்திமா மரணத்துக்கு நீதி கிடைக்கும்
இதையடுத்து பாத்திமாவின் தந்தை லத்தீப் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனக்கு இதைக் குறித்து ஏதும் தெரியாது. என் மகள் பாத்திமா மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன்" என்று லத்தீப் கூறினார்.
இதையும் படிங்க: 'Ex Minister Rajendra Balaji வர வேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வருவாரு!'