தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஐஐடி விடுதியில் பிஹெச்.டி மாணவியின் தாலி திருட்டு

சென்னை ஐஐடியில் பிஹெச்.டி படிக்கும் மாணவி, தனது தாலிச் செயினைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை ஐஐடி விடுதியில் பிஎச்டி மாணவியின் தாலி திருட்டு
சென்னை ஐஐடி விடுதியில் பிஎச்டி மாணவியின் தாலி திருட்டு

By

Published : Aug 29, 2021, 4:08 PM IST

சென்னை: சென்னை ஐஐடியில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருபவர், பவானி ஆத்தி (34). இவர் கல்லூரி வளாகத்திலுள்ள சபர்மதி விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி காலை அவர் தனது அறையில் 35 கிராம் மதிப்புள்ள தங்க தாலிச் செயினைக் கழற்றி வைத்துவிட்டு, துணிகளை துவைக்கச் சென்றதாக கூறப்படுக்கிறது.

பின்னர் வந்து பார்த்தபோது அறையில் தாலி காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து பக்கத்து அறையினரிடமும் கேட்டுள்ளார். ஆனால், தாலி கிடைக்கவில்லை.

காவல் நிலையத்தில் புகார்

விடுதி காவலரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பவானி ஆத்தி காணாமல் போன தனது தாலிச் செயினை கண்டுபிடித்து தருமாறு கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அவசர அவசரமாக பள்ளிகளைத் திறக்க வேண்டாம்' - எய்ம்ஸ் பேராசிரியர்

ABOUT THE AUTHOR

...view details