சென்னை:கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டில் மெட்ராஸ் ஐஐடியின் புதிய வளாகம் துவக்கப்பட உள்ளளதாகவும் (First international campus of IIT Madras in Tanzania), நாட்டில் உயர்கல்வி படிப்பவர்களின் விகிதத்தை 50 சதவீதத்திற்கு மேல் உயர்த்த வேண்டும் என்பதுதான் மெட்ராஸ் ஐஐடியின் நோக்கம் என அதன் இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.
மேலும் தேசியக் கல்விக்கொள்கையில் (National Policy on Education - NEP) கூறப்பட்டுள்ளது போல், உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் குறைவாக இருக்கும்போது, அவற்றில் சேர்ப்பதற்கு நுழைவுத்தேர்வு அவசியம். மெட்ராஸ் ஐஐடியில் சாதிய பாகுப்பாடு கடைபிடிக்கப்படவில்லை. ஐஐடியில் காலியாக இருந்த பின்னடைவு பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டுள்ளதாகவும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார். தேசிய கல்வியியல் தரவரிசை பட்டியலை மத்திய அரசின் கல்வி அமைச்சகம் (NIRF Rankings 2023) நேற்று வெளியிட்டது. அதில், மெட்ராஸ் ஐஐடி ஐந்தாவது ஆண்டாக ஒட்டுமாெத்தமாக முதலிடத்திலும், பொறியியல் பிரிவில் எட்டாவது ஆண்டாக முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மெட்ராஸ் ஐஐடி; 8வது ஆண்டாக முதலிடம்:இதுகுறித்து இன்று (ஜூன் 6) செய்தியாளர்களிடம் பேசிய மெட்ராஸ் ஐஐடி இயக்குனர் காமகோடி, 'தேசிய கல்வியியல் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் 25 சதவீதம் தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் வந்துள்ளன. அது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. ஒட்டுமாெத்தமாக முதலிடத்திலும், பொறியியல் கல்வி நிறுவனங்களின் வரிசையில் 8 வது ஆண்டாக முதலிடமும் பெற்றுள்ளது. இதற்கு மெட்ராஸ் ஐஐடியில் அனைவரும் இணைந்து பணியாற்றியதால் முடிந்தது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
5வது ஆண்டாக ஒட்டுமொத்த புள்ளியிலும் முதலிடம்:இந்த தரவரிசையை தேசிய கல்வியியல் தரவரிசை பட்டியலில் மற்ற மாநிலங்களில் இருந்து படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, ஆண், பெண் பாலின விகிதம் உள்ளிட்ட 5 தரவுகள் திரட்டி தேசிய கல்வியில் தரவரிசை அமைப்பு இந்த தரவரிசை பட்டியலை வழங்கி வருகிறது என்றார். அதன் அடிப்படையில், ஐந்தாவது ஆண்டாக ஒட்டுமொத்த குறியீடுகளில் முதலிடத்தையும், பொறியியல் பிரிவில் எட்டாவது ஆண்டாக முதலிடத்தையும் பிடித்துள்ளதாக வியப்புடன் கூறினார். இது மிகவும் பெருமையான தருணம் எனக் கூறிய அவர், இத்தனை ஆண்டுகளாக முதலிடம் பிடித்ததுள்ளது எங்களுக்கு ஊக்கம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொடர்ந்து 5 வது ஆண்டாக முதலிடம் : சென்னை ஐஐடி சாதனை
மெட்ராஸ் ஐஐடியில் படிக்க ஒரு மகத்தான வாய்ப்பு:தற்போது, தேசிய The Gross Enrolment Ratio - GER விகிதம் 26 சதவீதம் உள்ளதாகவும், அதை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது இலக்காக உள்ளது என்றார். தமிழ்நாடு GER விகிதம் 50 சதவீதத்திற்கும் மேலாக உள்ளதை இந்தியா முழுவதும் கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்காக உள்ளது என்று கூறியுள்ளார். மெட்ராஸ் ஐஐடியில் மாணவர்கள் அதிகளவில் படிக்க வேண்டும் என்பதற்காக நுழைவுத் தேர்வு இல்லாத பி.எஸ். டேட்டா சயின்ஸ் (BS in Data Science), பி.எஸ். எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளை தொடங்கியுள்ளதாக கூறினார். இவ்வாறு தரமான கல்வி அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்று செயல்பட்டு வருவதாக விளக்கினார்.
கிராமப்புற இளைஞர்கள் முன்னேற்றத்தில் பங்கு:மேலும், அனைவருக்கும் ஐஐடிஎம் (IITM) என்ற திட்டத்தையும் செயல்படுத்தி வருவதோடு, கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக 2022-ல் 5 தொடர்பு மையங்களில் இருந்த இருந்து இந்த ஆண்டு 180 ஐஐடி தொடர்பு மையங்கள் உருவாக்கப்படுள்ளன என்றார். தமிழ்நாட்டில் உள்ள 809 மையங்களில் 'கல்வி சக்தி' என்ற பெயரில் எங்கள் தன்னார்வலர்கள் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதாகவும், இதன்மூலம் உயர்கல்வியில் ஒட்டுப்மொத்த மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும்போது தான் மகிழ்ச்சியாக இருக்கும் என்றார்.
மாணவர் தற்கொலை விவகாரம்; ஆய்வுக்குழு அறிக்கை வரவில்லை:மெட்ராஸ் ஐஐடியில் இருக்கும் மாணவர்களின் மன அழுத்ததை குறைப்பதற்காக 'நலம்' திட்டம் செயல்படுத்தி வருவதோடு, இதற்காக பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இதனால், மாணவர்கள் தங்களின் மன ஆழுத்தம் குறைந்துள்ளதாக தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், மாணவர் தற்கொலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்கு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்னும் வரவில்லை என்றும் மெட்ராஸ் ஐஐடியில் 15 மையங்களை ஆரம்பித்துள்ளதாகவும், மாணவர்கள் ஐஐடியில் ஒரு பாடப்பிரிவில் படிக்கும்போது வேறு பாடப்பிரிவினையும் தேர்வு செய்து படிக்கலாம் என்று இதில் உள்ள வாய்ப்புகளை விளக்கினார்.
இதையும் படிங்க:சென்னை ஐஐடியில் 5% மாணவர்களுக்கு மன அழுத்தம்...6 வாரத்தில் நடவடிக்கை - ஐஐடி இயக்குநர்
JEE தேர்வு முடிவுகள் வர உள்ள நிலையில், பெற்றோர்களுக்கு சொல்ல நினைப்பது ரேங்க் என்பது ஒரு எண் தான்; குழந்தைகளை அழுத்தத்திற்கு உள்ளாக்காதீர்கள். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கம்ப்யூட்டர் துறை தேர்வு செய்கின்றனர் என்றார். இன்னும் சில ஆண்டுகளில் துறைரீதியான பிரிவுகள் இல்லாமல் அனைத்து துறைகளும் இணைந்துதான் செயல்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்காக அடுத்த கட்ட நடவடிக்கை என்பது Inter Disciplinary Courses செயல்படுத்தப்படும் என்று தெரிவித்த அவர், 12ஆம் வகுப்பு முடித்த பின்னர் மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்க மெட்ராஸ் ஐஐடியில் 2 ஆண்டுகள் படித்தப் பின்னர்தான், முடிவு செய்யும் நிலைக்கு வருவார்கள் என்றார். எனவே தான், பிற துறைகளையும் இணைத்து இந்த Inter Disciplinary Courses தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.