சென்னை: ஐஐடி மற்றும் எம்பசிஸ், கிளவுட் கம்ப்யூட்டிங், அறிவாற்றல் சேவைகளில் தகவல் தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், "இதனால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உயர்தர பட்டதாரிகளை உருவாக்கும் மையத்தை உருவாக்கவும், தொழில்நுட்பங்களில் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கும், கல்வியில் குவாண்டம் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், தொடர்புடைய டொமைன்களுடன் சீரமைக்கப்பட்ட ஸ்டார்ட்-அப்களுக்கு உதவுதல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் கல்வி உதவித் தாெகை வழங்குதல், உயர்கல்விக்கு ஆதரவு அளிப்பதுடன், குவாண்டம் அறிவியல், குறிப்பிட்ட குவாண்டம் கட்டமைப்புகளில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களின் அங்கீகரிக்கப்பட்டு குறிப்பிடத்தக்க சமூக தாக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியவை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த முயற்சிக்கு எம்பாசிஸ் அறக்கட்டளை, 5 ஆண்டுகளில் 21 கோடி நிதி உதவி வழங்குகிறது. இந்த கூட்டாண்மை குவாண்டம் தகவல்களில் இந்தியாவின் தலைமையை பலப்படுத்தும், விரிவான பயிற்சியை மேம்படுத்தும் மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் கல்வி மற்றும் பயிற்சிக்கான தரமான ஆதாரங்களை உருவாக்கும்.