தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பகுதியில் குப்பை அகற்ற புதிய தொழில்நுட்பம்! - garbage removing

சென்னை: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு சென்னை ஐஐடி புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

air bin
air bin

By

Published : Apr 27, 2020, 5:50 PM IST

தமிழ்நாட்டில், கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதில், சென்னை மாநகராட்சியில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் வசித்தப் பகுதிகளுக்குள் துப்புரவுப் பணியாளர்கள் அடிக்கடி சென்று வருவது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் மருத்துவமனைகள் ,ஆய்வகங்களில் சேரும் மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கு சிரமமாக உள்ளது. எனவே இதுபோன்ற சவால் மிகுந்த காலத்தில் குப்பைகளை பாதுகாப்புடன் அகற்றுவதற்காக சென்னை ஐஐடி புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கிவுள்ளது.

குப்பைத் தொட்டி

ஐ.ஐ.டி தொழில் முனைவோர் மையம் சார்பில் குப்பைகள் அதிகம் சேருவதை கண்டறியும் வகையில் நவீன தொழில்நுட்ப முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்மார்ட் குப்பை அகற்றும் முறை என்று இதன் செயல்பாட்டிற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக Air bin system என்று நவீன கருவி ஐ.ஐ.டி சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா நோய் பரவல் அதிகரித்திருக்கும் சூழலில் மருத்துவமனைகள், நோய் பரவலால் தடைசெய்யப்பட்ட பகுதிகள், ஆய்வகப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் அதிகளவு சேர்ந்து சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்புள்ளது.

சென்னை ஐஐடி புதிய தொழில்நுட்பம்

எனவே குப்பைகள் அதிகமாக சேருவதை செல்போன் செயலிகள் மூலம் அறிந்து குப்பைகளை வேகமாக அப்புறப்படுத்துவதே ஸ்மார்ட் குப்பை தடுப்பு முறையின் நோக்கமாக இருக்கிறது. இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள Air bin எனப்படும் கருவி தற்போது புழக்கத்தில் உள்ள குப்பை தொட்டிகளில் பொருத்தப்பட்டு அதன் மூலம் குப்பைகள் அதிகம் சேருகின்றபோது செல்போன்களுக்கு தகவல்வந்து சேரும்.

கரோனா பகுதியில் குப்பை அகற்ற புதிய தொழில்நுட்பம்!

இதன்மூலம் தேவையில்லாமல் குப்பைகள் தேங்கிக் கிடப்பதை தவிர்க்க முடியும். ஐ.ஐ.டி தொழில் முனைவோர் மையம் மற்றும் ஐ.ஐ.டி மாணவர்களின் அந்தாரிக்‌ஷ் எனப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனம் சார்பில் இந்த நவீன தொழில்நுட்ப முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் பார்க்க: 'பரிசோதனைக் கருவிகள் விற்பனையில் ஊழல் செய்பவர் மீது நடவடிக்கை வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details