கரோனோ வைரஸ் தொற்று பரவல் காரணமாக, இந்தப் பயிற்சிகள் ஆன்லைனில் முதற்கட்டமாக நடத்தப்படுகின்றன.
நிதி நிறுவனங்கள், வங்கிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து சென்னை ஐஐடியின் மேலாண்மை துறை பேராசியர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வங்கி மற்றும் முதலீடு சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் இருந்தும், வேலைவாய்ப்புக்கான திறன் மாணவர்களிடம் குறைவாக இருப்பதால், அதற்கான திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில், இந்த 3 மாத கால பயிற்சி அளிக்கப்பட உள்ளது.