சென்னை: சென்னை மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து வனவிலங்குகளை வேட்டையாடுவதில் இருந்து காப்பாற்ற உதவும் ஒரு புதுமையான வழிமுறை இயந்திரத்தை ஒருங்கிணைந்த பாதுகாப்பு பயனுள்ள கொள்கை (Combined Security Game Policy Optimization) மூலம் உருவாக்கியுள்ளனர்.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இந்த ட்ரோன்களின் உதவியோடு வனவிலங்குகளை வேட்டையாடுவதில் இருந்து பாதுகாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வனவிலங்குகளை வேட்டையாடும் குற்றவாளிகளைக் கண்டறியத் தேவையான ஆட்கள் குறைவாக இருப்பதால், ஆராய்ச்சியாளர்கள் இந்த வழிமுறையை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இது கிடைக்கும் வளங்களைக் கொண்டு வனவிலங்குகளைப் பாதுகாக்க ஒரு நல்ல உத்தியை வழங்குகிறது. இந்தப் புதிய வகை யுக்தி, அதே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட முந்தையவற்றைக் காட்டிலும் அதிக திறன் கொண்ட உத்திகளை வழங்குகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழிமுறையானது வள ஒதுக்கீட்டைக் கையாள்வதன் மூலமும், கிடைக்கக்கூடிய வளங்களின் அளவு கண்டறியப்பட்ட பிறகு ரோந்துப் பணி மூலம் செயல்படுகிறது. இந்த ட்ரோன்கள் வனப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை பற்றிய தரவுகளைக் கண்டறிய பயன்படுத்துகிறது மற்றும் பல்வேறு தளங்களில் ரோந்துச் செல்வது குறித்து வேட்டையாடுபவர்களைக் கண்டறியவும் உதவுகிறது.