தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஐஐடியில் 110 பேருக்கு கரோனா!- ராதாகிருஷ்ணன்ஆய்வு - Chennai IIT covid cases increased

சென்னை ஐஐடியில் மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ஐஐடியில் 110 பேருக்கு கரோனா!- செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு
சென்னை ஐஐடியில் 110 பேருக்கு கரோனா!- செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு

By

Published : Apr 26, 2022, 2:31 PM IST

சென்னை ஐஐடியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் தங்கிப் படிக்கும் மூன்று மாணவிகளுக்கு கடந்த 19 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள், பேராசிரியர்கள் 3079 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வந்துள்ளது.

இதில் 25 ஆம் தேதி வரையில் 79 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 26) மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் சென்னை ஐஐடியில் கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ஐஐடியில் 110 பேருக்கு கரோனா!- செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு

சென்னை ஐஐடியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட மாணவர்களை சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னை ஐஐடி வளாகத்தில் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரோனாவிற்கு புதிய மருந்து நல்ல செய்தியை வெளியிட்ட சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details