தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

6 ஜி நெட்வொர்க்குகள் செயற்கை நுண்ணறிவு: சென்னை ஐஐடி, எரிக்சன் நிறுவனத்துடன் ஆராய்ச்சி ஒப்பந்தம்! - Centre for Responsible AI

சென்னை ஐஐடியின் பொறுப்பு AI க்கான மையம் (CeRAI), செயற்கை நுண்ணறிவு குறித்த ஆராய்ச்சிக்காக எரிக்சனுடன் (Ericsson) கைகோர்த்துள்ளது.

6 ஜி நெட்வொர்க்குகள் செயற்கை நுண்ணறிவு: சென்னை ஐஐடி எரிக்சன் நிறுவனத்துடன் ஆராய்ச்சி!
6 ஜி நெட்வொர்க்குகள் செயற்கை நுண்ணறிவு: சென்னை ஐஐடி எரிக்சன் நிறுவனத்துடன் ஆராய்ச்சி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 7:02 PM IST

சென்னை :சென்னை ஐஐடியின், சென்டர் பார் ரெஸ்பான்சிபிள் ஏஐ (செராய்) Centre for Responsible AI (CeRAI), எரிக்சன் (Ericsson) நிறுவனத்துடன் இணைந்து பொறுப்பான செயற்கை நுண்ணறிவு தொடர்பான கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது.

எரிக்சன் மற்றும் ஐஐடி மெட்ராஸ் சென்டர் ஆகியவை ஐந்து ஆண்டுகளுக்கு ‘பிளாட்டினம் கூட்டமைப்பு உறுப்பினராக’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், Ericsson Research ஆனது CerAI இல் உள்ள அனைத்து ஆராய்ச்சி நடவடிக்கைகளிலும் பங்கேற்கும்.

6ஜி நெட்வொர்க்குகள், செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளைக் கொண்டு சுயமாக இயங்கக்கூடும் என்பதால், எரிக்சன் நிறுவனத்தின் ஏஐ ஆராய்ச்சி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். செராய் (CeRAI) என்பது, பொறுப்பான செயற்கை நுண்ணறிவில் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சிக்கான முதன்மை மையமாகவும், செயற்கை நுண்ணறிவு அமைப்புகளைப் பயன்படுத்தி இந்திய சுற்றுச்சூழல் அமைப்பில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இடைநிலை ஆராய்ச்சி மையமாகவும் திகழ்கிறது.

கூட்டாண்மையின் போது, எதிர்கால நெட்வொர்க்குகளுக்கான பொறுப்பான AI பற்றிய சிம்போசியம் நடைபெற்றது, இதில் IIT மெட்ராஸ் மற்றும் எரிக்சன் ஆராய்ச்சி தலைவர்கள் பொறுப்பான AI துறையில் முன்னேற்றங்கள் பற்றி விவாதிக்க பங்கேற்றனர்.

இதையும் படிங்க: "ஹைதராபாத்தில் போட்டியிடுங்கள்" - ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்த அசாதுதீன் ஓவைசி!

சென்னை ஐஐடியின் (தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி) (Industrial Consultancy and Sponsored Research) டீன் மனு சந்தானம் கூறும்போது, "செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சி நாளைய வணிகங்களை இயக்குவதற்கான கருவிகளை உருவாக்குவதாகும். தொழில்துறையுடன் இணைந்து, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயலாற்ற முடியும். எரிக்சன் நிறுவனத்துடன் இணைந்து இந்த அதிநவீன ஆராய்ச்சிப் பணியில் கூட்டாண்மையுடன் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது", என்றார்.

எரிக்சன் ஆராய்ச்சியின் தலைவர் டாக்டர் மேக்னஸ் ஃப்ரோடிக் கூறும்போது, "ஆழ்ந்த அனுபவங்களை வழங்குவதன் மூலமாக, மனிதர்கள் மற்றும் டிஜிட்டல் உலகங்கள் ஒன்றோடொன்று கலப்பதை 6ஜி மற்றும் எதிர்கால நெட்வொர்க்குகள் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.

ஏஐ ஆல் கட்டுப்பாட்டில் உள்ள சென்சார்கள் மனிதர்கள் மற்றும் இயந்திரங்களை இணைக்கும். அதே வேளையில், பொறுப்பான செயற்கை நுண்ணறிவு நடைமுறைகள் மூலம் நம்பிக்கை, நேர்மை மற்றும் தனியுரிமையை உறுதி செய்வது அவசியமாகிறது.

பாரத் 6ஜி திட்டத்திற்கான இந்திய அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் சென்னை ஐஐடி செராய் இந்த கூட்டு முயற்சியில் இணைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

சிம்போசியத்தின் போது கூட்டாண்மையைக் குறிக்கும் வகையில், 'எதிர்கால நெட்வொர்க்குகளுக்கான பொறுப்பான AI' என்ற தலைப்பில் ஒரு குழு விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டது மற்றும் பொறுப்பான AI மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தற்போதைய ஆராய்ச்சி நடவடிக்கைகள் சில காட்சிப்படுத்தப்பட்டன. சிம்போசியத்தின் போது சுகாதாரப் பாதுகாப்பில் பெரிய மொழி மாதிரிகள் (LLMகள்) மற்றும் பங்கேற்பு AI பற்றிய திட்டங்கள் உட்பட பல திட்டங்கள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: 'நமஸ்தே' - எலான் மஸ்கின் மனித வடிவிலான ஆப்டிமஸ் ரோபோ!

ABOUT THE AUTHOR

...view details