சென்னை - தாம்பரத்தை அடுத்துள்ள நெடுங்குன்றத்தைச் சேர்ந்தவர் துரைமுருகன் (35). இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை உறவினர் திருமணத்திற்காக குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.