சென்னை: சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பாம் ஷோர் தனியார் உணவகத்தில், திரிபுரா மாநிலத்தைச்சேர்ந்த பிஸ்வா சாதன் ஜமாத்தியா என்பவர் தங்கிப் பணியாற்றி வந்துள்ளார். உணவகத்தில் பாத்திரம் கழுவும் பணியை பிஸ்வா சாதன் செய்து வந்துள்ளார்.
மின்சாரம் தாக்கி தனியார் உணவகத்தொழிலாளி பலி - மின் தாக்கி தொழிலாளி பலி
பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த உணவகத்தொழிலாளி திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![மின்சாரம் தாக்கி தனியார் உணவகத்தொழிலாளி பலி ஹோட்டல் தொழிலாளி பலி மின் தாக்கி தொழிலாளி பலி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16859346-thumbnail-3x2-chennai.jpg)
வழக்கம் போல் வேலை பார்த்துக்கொண்டு இருந்த பிஸ்வா சாதன் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது. துடிதுடித்து மயங்கி விழுந்த பிஸ்வா சாதனை, சக ஊழியர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பிஸ்வாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர், ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். திடீரென மின்சாரம் பாய்ந்ததற்கான காரணம் குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : பாதுகாப்பான நிலையில் மின்கம்பியில் சிக்கிய சாவியை எடுக்க முயன்ற நபர்; மின்சாரம் தாக்கி பலி