சென்னை காவல்துறைக்குச் சொந்தமான குதிரைப்படை பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டுவருகிறது. இதிலுள்ள 35 குதிரைகளை முப்பது குதிரை மேய்ப்பாளர்கள் கவனித்து வருகின்றனர். தற்போது மேய்ப்பாளர்கள் பாதிக்கு மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
சில மேய்ப்பாளர்களுக்கு அறிகுறிகள் இருந்தாலும் தொடர்ந்து வேலையில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக, குதிரை மேய்ப்பு வேலையைத் தவிர மற்ற எடுபிடி வேலைகளுக்கும் இவர்களைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. மேலும் கட்டட வேலைகள் உள்ளிட்ட வேலைகளை மேற்கொள்ள வைப்பதும், அதற்குண்டான பணத்தை சில அலுவலர்கள் கையாடல் செய்வதும் நிகழ்வதாகத் தெரியவந்துள்ளது.