தமிழ்நாடு

tamil nadu

இன்சூரன்ஸ் கட்டாயம் - உத்தரவை திரும்பப் பெற்றது நீதிமன்றம்

By

Published : Sep 14, 2021, 12:44 PM IST

Updated : Sep 14, 2021, 3:40 PM IST

பம்பர் டூ பம்பர்
பம்பர் டூ பம்பர்

12:39 September 14

5 ஆண்டுகளுக்கு பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ் கட்டாயம் என்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றது.

சென்னை: புதிய வாகனங்களுக்கு, செப்டம்பர் 1 முதல், பம்பர் டூ பம்பர், காப்பீடு கட்டாயம் என பிறப்பித்த உத்தரவை, திரும்பப் பெறுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒகேனக்கல்லில் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சடையப்பன் குடும்பத்திற்கு 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது.

ஈரோடு தீர்ப்பாய உத்தரவை ரத்து 

இதை எதிர்த்து நியூ இந்திய அஷுரன்ஸ் கம்பெனி, சென்னை நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ஈரோடு தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், வாகனங்கள் வாங்குபவர்களுக்கு காப்பீடு தொடர்பான விவரங்களை முழுமையாக தெரிவிப்பதில்லை என்று விற்பனையாளர்களை குற்றம்சாட்டியிருந்தார்.

செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில், ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி புதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டிருந்தார். 

பயணிகளின் பாதுகாப்பு

இந்நிலையில் பொது காப்பீட்டு கவுன்சில், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ் திட்டத்தை, காப்பீட்டு நிறுவனங்கள் அமல்படுத்த மூன்று மாத கால அவகாசம் வேண்டும் என்றும், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 14) மீண்டும் விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி தற்போதைய சூழலில் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் காப்பீடு  திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதற்கான சூழல் இல்லை என்று தெரிவித்து அந்த உத்தரவை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளார்.

அதேசமயம் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய திருத்தங்களை, அரசு கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்து, தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை சுற்றறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார். 

இதையும் படிங்க: மாநிலங்களவை தேர்தல் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

Last Updated : Sep 14, 2021, 3:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details