தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புத்தகத்தில் மட்டும்தான் பக்கிங்காம் கால்வாய் இருக்கும் - உயர்நீதிமன்றம் வேதனை - பக்கிங்காம் கால்வாய்

பக்கிங்காம் கால்வாயை முறையாக சீர்படுத்தவில்லை என்றால் வரலாற்று புத்தகத்தில் மட்டும்தான் கால்வாய் குறித்த பதிவுகள் இருக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

buckingham canal  chennai high court  chennai high court tormented about buckingham canal  உயர்நீதிமன்றம்  பக்கிங்காம் கால்வாய்  சென்னை உயர்நீதி மன்றம்
பக்கிங்காம் கால்வாய்

By

Published : Sep 15, 2021, 6:31 AM IST

சென்னை: கிராமங்களில் உள்ள குளம், குட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் சுதர்சனம் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், "நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படாதது தொடர்பாக அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது அவசியம்.

மாதவரம் கிராமத்தில் உள்ள 1.17 ஹெக்டேர் பரப்பிலான ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி அதனை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்” என்ற கோரியிருந்தார்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சிக்கு, மனுதாரர் புதிதாக மனு அளிக்கவும், அந்த மனுவின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட பகுதியை அலுவலர்கள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும், நீர்நிலைகளை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

பின்னர், சென்னையில் மொத்தம் எத்தனை நீர் நிலைகள் உள்ளது, என மாநகராட்சி தரப்புக்கு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர், நீர்நிலைகளை அடையாளம் காண திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், அதன் அடிப்படையில் நீர்நிலைகள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

"பக்கிங்காம் கால்வாயை ஏன் சீர்படுத்தவில்லை? அது ஒரு அருமையான கால்வாய், நீர்வழி போக்குவரத்திற்கான கால்வாய். இதனை முறையாக சீர்படுத்தவில்லை என்றால், வரலாற்று புத்தகத்தில் மட்டுமே கால்வாய் குறித்த பதிவுகள் இருக்கும்" என வேதனை தெரிவித்த நீதிபதிகள் நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டுமென்று அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க: இன்சூரன்ஸ் கட்டாயம் - உத்தரவை திரும்பப் பெற்றது நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details