சென்னை:கொலை, கொள்ளை, மிரட்டல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தேடப்பட்டுவந்த பிரபல ரவுடி சி.டி. மணி, கடந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி போரூர் பாலத்திலிருந்து தப்பியோட முயன்றபோது வளசரவாக்கம் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஜூன் 26ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
மணி மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது தந்தை பார்த்தசாரதி தாக்கல்செய்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆர்.என். மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அடாவடியாக வீட்டில் கைது
அப்போது மனுதாரர் தரப்பில், தன் மகனை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், காவல் துறையினர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கி முனையில் சி.டி. மணியை கைதுசெய்ததாகவும், ஆனால் போரூர் பாலத்தில் கைதுசெய்ததாக கதை ஜோடித்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.