தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமின் மறுப்பு - முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமின் மறுப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமின் மறுப்பு

By

Published : Jun 16, 2021, 10:49 AM IST

Updated : Jun 16, 2021, 12:12 PM IST

10:41 June 16

திருமணம் செய்து கொள்வதாகக்கூறி துணை நடிகையை ஏமாற்றிய வழக்கில் முன்பிணைகோரி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாகக்கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் துணை நடிகை சாந்தினி அளித்தப் புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்பிணைகோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி அப்துல்குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.

பழக்கத்தை ஒத்துக்கொண்ட மணிகண்டன் தரப்பு:

மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மணிகண்டன் திருமணமானவர் எனத் தெரிந்து தான் அவருடன் நடிகை சாந்தினி குடும்பம் நடத்தியுள்ளதாகத் தெரிவித்தார். நடிகையை காயப்படுத்தியதாக கூறுவதற்கு எந்த மருத்துவ ஆதாரங்களும் இல்லை எனவும் வாதிட்டார்.
மேலும், அறிமுகம் ஆன மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்ததாக காவல் துறை தெரிவிப்பது தவறானது. தான் குற்றவாளி என்பதற்கு முகாந்திரம் இருந்தால் தன்னை காவல் துறையினர் கைது செய்யட்டும் எனத் தெரிவித்த மணிகண்டன் தரப்பு, ஏப்ரல் 15ஆம் தேதி வரை தன்னுடன் சாந்தினி வசித்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்படது. மேலும், காவல் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதால் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
காவல் துறை ஆரம்ப கட்டத்தில் உள்ள விசாரணை:காவல் துறை தரப்பில், விசாரணை தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையில், சாந்தினி மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
முன்ஜாமின் வழங்கக் கூடாது

மூன்று முறை சாந்தினி கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் முக்கிய சாட்சிகளை விசாரித்து ஆதாரங்கள் சேகரிக்க வேண்டியுள்ளதால், முன்ஜாமின் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது. மணிகண்டனுக்கு முன்ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சாந்தினி தரப்பில், தன்னைத் திருமணம் செய்து கொள்வதற்கான தோற்றத்தை ஏற்படுத்தியதால் தான் பழக்கத்திற்கு ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்பட்டது.
மேலும், 'திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியை மீறினால், விபரீத பழக்கத்திற்கு அளித்த ஒப்புதலை ஒப்புதலாக கருத வேண்டாம்' என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டிய சாந்தினி தரப்பு வழக்கறிஞர் முன்ஜாமின் வழங்கக் கூடாது என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மணிகண்டனின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

இதையும் படிங்க: நாட்டிலேயே முதன்முதலாக பச்சை பூஞ்சை நோயால் ஒருவர் பாதிப்பு

Last Updated : Jun 16, 2021, 12:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details