தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் ஐ.பெரியசாமி மீது பதியப்பட்ட வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் - அமைச்சர் பெரியசாமி

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் I.பெரியசாமி மீது பதியப்பட்ட வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்
அமைச்சர் I.பெரியசாமி மீது பதியப்பட்ட வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Apr 8, 2022, 11:04 PM IST

சென்னை:கடந்த 2014ஆம் ஆண்டு, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் திமுக சார்பில் ஐ.பெரியசாமி தலைமையில் 'சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் காவல் துறையை விமர்சித்து ஐ.பெரியசாமி பேசியதாக நிலக்கோட்டை காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, அரசியல் உள்நோக்கத்துடன் பதியப்பட்டுள்ள வழக்கு என்பதால், அதை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார். இதனை ஏற்ற நீதிபதி, பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: Video: 'பார்வ கற்பூர தீபமா..' - 'வாவ்' கரூர் கலெக்டருக்குள்ள இப்படி ஒரு திறமையா..!

ABOUT THE AUTHOR

...view details