சென்னை: சமூக மருத்துவ சேவைகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் பிரிவில் இரண்டாண்டு டிப்ளமோ படித்தவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் நடத்தி வருகின்றனர். தங்கள் பணியில் அரசும் காவல் துறையும் தலையிடுவதாக கூறியதை தடுக்க வேண்டுமென கணேசன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்குகள் நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் தமிழ்நாடு கிளினிக்குகள் நிறுவனங்கள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி அரசு அனுமதி பெற்றுதான் கிளினிக்குகள் நடத்த முடியும் என்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி தகுதியை பெற்று அதை சம்பந்தப்பட்ட கவுன்சில்களில் பதிவுசெய்தால் மட்டுமே அந்த கிளினிக்குகளை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டது.