தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மூன்று மாதங்களில் பிரஸ் கவுன்சில் -தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

போலி பத்திரிகையாளர்களை களைய ஏதுவாக, உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை மூன்று மாதங்களில் ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்திரிக்கையாளர் சங்க  பிரஸ் கவுன்சில்  பிரஸ் கவுன்சில் அமைக்க உத்தரவு  சென்னை உயர்நீதிமன்றம்  தமிழ்நாடு அரசு  தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  மூன்று மாதங்களில் பிரஸ் கவுன்சில்  journalists welfare  Chennai High Court orders Tamil Nadu government to make Press Council in three months  Chennai High Court orders  Tamil Nadu government  Press Council  chennai news  chennai latest news
சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Aug 28, 2021, 4:40 PM IST

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலராக பணியாற்றிய போது, பொன். மாணிக்கவேல், தவறான அறிக்கைகளை தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த சேகர்ராம் என்பவர் பத்திரிகையாளர் என கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு விசாரணையின் போது சேகர் ராம் போலி பத்திரிகையாளர் என பொன்.மாணிக்கவேல் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் போலி பத்திரிகையாளர்களை களையெடுப்பது தொடர்பாக விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் விரிவுபடுத்தியது.

பிரஸ் கவுன்சில் அமைக்க வேண்டும்

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு, உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், மூத்த பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் அடங்கிய தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

பிரஸ்கிளப் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்களை அங்கீகரிக்கும் அதிகாரத்தை பிரஸ் கவுன்சிலுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும், சாதி, மத, மொழி அடிப்படையில் பத்திரிகையாளர் சங்கங்களை அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.

தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே பத்திரிகையாளர் சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மூலமாக மட்டுமே பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டுமே தவிர, நேரடியாக வழங்க கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும்

போலி பத்திரிகையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்க கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் அங்கீகார அடையாள அட்டை வழங்கும் விதிகளில் 3 மாதங்களில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறினால், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்து, விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: ‘வேளாண் சட்டப் போராட்ட வழக்குகள் ரத்து’ - முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details