சென்னை: கரோனா தொற்றுப்பரவல் அச்சத்தால் 1 முதல் 8ஆம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவில்லை.
இதன் காரணமாக தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், சத்துணவு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக் கோரி சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப் என்ற அமைப்பின் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
அங்கன்வாடி மையங்கள் மூலமே உணவு விநியோகம்
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செப்.24) விசாரணைக்கு வந்தது.
அப்போது 1 முதல் 8ஆம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படாமல், அங்கன்வாடி மையங்கள் மூலம் மட்டுமே உணவு வழங்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் பேசுகையில், “சில வாரங்களில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன. ஆகையால் பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை தொடங்க வேண்டும்” என அரசுக்கு உத்தரவிட்டனர். பின்னர் இது தொடர்பான விசாரணை 3 வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.
இதையும் படிங்க:உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவுக்கு விளக்கம் அளிக்கும்படி ஆணையத்திற்கு உத்தரவு