தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹஜ் புனித பயணம் குறித்த அரசின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவு

ஹஜ் புனித பயணம் செய்வோருக்கான புறப்பாட்டு தளமாக சென்னையை மீண்டும் அறிவிக்க கோரிய, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி ஹஜ் கமிட்டிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hajj pilgrimage  hajj committee  chennai high court orders hajj committee  chennai high court  ஹஜ் புனித பயணம்  ஹஜ் புனித பயணம் சென்னையை புறப்பாட்டு தளமாக அறிவிக்க கோரிக்கை  ஹஜ் கமிட்டிக்கு  சென்னை உயர் நீதிமன்றம்
ஹஜ் புனித பயணம்

By

Published : Apr 8, 2022, 4:25 PM IST

சென்னை:ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள வசதியாக சென்னை, கொச்சி, ஹைதராபாத் உள்பட 21 இடங்கள் புறப்பாட்டு தலங்களாக அறிவிக்கப்பட்டன. இதனிடையே கரோனா காரணமாக 21 தலன்கள் 10ஆக குறைக்கப்பட்டன. அந்த வகையில் சென்னை நீக்கப்பட்டது.

சென்னையை மீண்டும் புறப்பாட்டு தளங்களின் பட்டியலில் சேர்க்கக் கோரி பாப்புலர் ஃபிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமானில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கொச்சிக்கு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சென்னையை மீண்டும் புறப்பாட்டு தலமாக மாற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஏப். 8) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "34 ஆண்டுகளாக சென்னை விமான நிலையம் ஹஜ் பயணிகளின் புறப்பாட்டு தளமாக இருந்து வந்தது. சென்னையில் இருந்து 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பயணிகள் புனித பயணம் மேற்கொள்வர்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு ஹஜ் கமிட்டி தரப்பில், சென்னை விமான நிலையத்தை புறப்பாட்டு தலமாக அறிவிக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கையை ஹஜ் கமிட்டி பரிசீலித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை பரிசீலித்து விரைந்து முடிவெடுக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: மருத்துவப் படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு ஏன்? - நீதிமன்றம் அளித்த விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details