தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு - அதிமுக பொதுகுழு கூட்டம்

அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு செய்த மனுக்களை நாளை (ஆகஸ்ட் 23) விசாரணைக்கு பட்டியலிட, பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai High Court  Chennai High Court Order to registration department  registration department  Chennai High Court Order to list out the petitions filed by edappadi palanisamy  petitions filed by edappadi palanisamy  edappadi palanisamy  petitions filed by edappadi palanisamy against order issued by court  admk general body meeting case  admk general body meeting  Eps appeal challenging favor of ops  ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனு  ஈபிஎஸ் மனுவை பட்டியலிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு  சென்னை உயர் நீதிமன்றம்  ஈபிஎஸ் மனு  எடப்பாடி பழனிசாமி  ஓ பன்னீர்செல்வம்  பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு  அதிமுக பொதுகுழு கூட்டம் வழக்கு  அதிமுக பொதுகுழு கூட்டம்
ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனு

By

Published : Aug 22, 2022, 12:41 PM IST

சென்னை: அதிமுக தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து செயல்பட முடியாத நிலையில், இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார். அதில் தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு மனுவை பட்டியலிடும்படி, கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் அந்த கூடுதல் மனுவும், ஓ பன்னீர்செல்வம் கேவியட் மனுவும் இன்று (ஆகஸ்ட் 22) நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது போல வைரமுத்து வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளையும் எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மூன்று மேல்முறையீடு மனுக்களிலும் தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட உத்தரவு நகல் இல்லாமல், விசாரணைக்கு ஏற்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற நீதிபதிகள், சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு மனுக்களை விசாரிக்க ஒப்புதல் அளித்ததுடன், மூன்று மனுக்களையும் நாளை (ஆகஸ்ட் 23) விசாரணைக்கு பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: அனைத்து சமூகத்தினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கான அரசின் உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்தது

ABOUT THE AUTHOR

...view details