2009ஆம் ஆண்டு ஏற்பட்ட வாகன விபத்தில் பொறியாளர் வெங்கட் ராகவன் உயிரிழந்தார். இது தொடர்பாக காப்பீட்டு நிறுவனத்தின் மீது போடப்பட்ட வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட வாகன விபத்துகளுக்கான நீதிமன்றம் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடாக மூன்று கோடியே 78 லட்சம் ரூபாயை காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு, உயிரிழந்தவரின் வயது, மாதச் சம்பளம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்து மூன்று கோடியே 78 லட்சத்து 84 ஆயிரத்து 640 ரூபாயை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.