தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் நிகழ்ச்சியால் போக்குவரத்து நெரிசல்! - மெட்ராஸ் உயர்நீதிமன்றம்

சென்னை: பட்டாபிராமில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Chennai
Chennai

By

Published : Feb 4, 2021, 5:17 PM IST

சென்னை ஆவடி அருகே பட்டாபிராமில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவருரின் 25ஆம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதற்காக அனுமதியின்றி சாலைகளில் பேனர்கள், வாழை மர தோரணம் வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் விழாவில் கலந்து கொள்ள தம்பதிகள் இந்துக்கல்லூரி முதல் பட்டாபிராம் காவல்நிலையம் வரை சி.டி.எச் சாலையில் 100 க்கும் மேற்பட்டோர் மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து ஊர்வலமாக சென்றனர்.

இதனால் பட்டாபிராம் முதல் ஆவடி வரை சாலையின் இருபுறங்களிலும் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெறும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் தகவல் அறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details