தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அறங்காவலர் காலியிடங்கள்: விரிவான அறிக்கை தாக்கல்செய்ய அரசுக்கு உத்தரவு - அறங்காவலர் காலியிடங்கள் நிரப்புவதற்கான நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எத்தனை கோயில்கள் உள்ளன, எத்தனை கோயில்கள் பரம்பரை அறங்காவலர்களின்கீழ் வரும், அறங்காவலர் மற்றும் பரம்பரை அறங்காவலர் காலியிடங்கள் எத்தனை உள்ளன, காலியிடங்களை நிரப்புவதற்கான திட்டமிடல் என்ன, நடைமுறைகள் என்ன என்பது தொடர்பான விரிவான அறிக்கையைத் தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில் அறங்காவலர் நியமனத்தில் திமுக அரசின் செயலை பாராட்டிய உயர் நீதிமன்ற நீதிபதிகள்
கோயில் அறங்காவலர் நியமனத்தில் திமுக அரசின் செயலை பாராட்டிய உயர் நீதிமன்ற நீதிபதிகள்

By

Published : Feb 16, 2022, 10:25 PM IST

சென்னை: கோயில் அறங்காவலர்கள் நியமனத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், அறநிலையத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுவை அமைக்கக் கோரி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் இன்று (பிப்ரவரி 16) விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி கோயிலை நிர்வகிக்கும் நபர்களாக அறநிலையத் துறை அலுவலர்களே நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், 97 விழுக்காடு கோயில்கள் அறங்காவலர்கள் இல்லாமல் செயல்படுகின்றன என்றும் வாதிட்டார்.

கோயில் அறங்காவலர் நியமன வழக்கு

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, அறங்காவலர்களைத் தேர்வுசெய்வதற்கான மாவட்ட குழுக்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், பதவிக்காலம் முடிந்த ஆறு மாவட்டங்களில் மீண்டும் அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கோயில் அறங்காவலர்

அப்போது நீதிபதிகள், அதிக வருமானம் வரக்கூடிய 314 கோயில்களில் மட்டும்தான் அரசு நியமிக்க வேண்டும் என உத்தரவிடவில்லை என்றும், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

தமிழ்நாடு அறநிலையத்துறை

15 ஆண்டுகளாக முறையாக நிரப்பப்படாத அறங்காவலர் இடங்களை நிரப்ப தற்போதைய அரசு முன்வந்துள்ளபோது, அந்தப் பணிகளை முடிக்க சில காலம் காத்திருக்க வேண்டுமென மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எத்தனை கோயில்கள் உள்ளன, எத்தனை கோயில்கள் பரம்பரை அறங்காவலர்களின்கீழ் வரும், அறங்காவலர் மற்றும் பரம்பரை அறங்காவலர் காலியிடங்கள் எத்தனை உள்ளன, காலியிடங்களை நிரப்புவதற்கான திட்டமிடல் என்ன என்பது தொடர்பான விரிவான அறிக்கையைத் தாக்கல்செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: 200 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோயில் தேரோட்டம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details