தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

தமிழ்நாட்டின் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கடந்த 2016ஆம் ஆண்டு தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!

By

Published : Jun 24, 2022, 5:33 PM IST

சென்னை: கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியை எதிர்த்து, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த தேர்தல் வழக்கில், வேட்புமனுவில் 16 குறைபாடுகள் இருந்ததால், அதனைத் தேர்தல் அலுவலர் ஏற்றுக்கொண்டது செல்லாது என அறிவிக்கக்கோரி, கடந்த 2016ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 2021இல், பதவிக் காலம் முடிந்ததால் காலாவதியாகிவிட்டது. எனவே, அதனை தள்ளுபடி செய்யக்கோரி அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் இன்று(ஜூன் 24) தீர்ப்பளித்துள்ளார்.

அதில் 2016-2021 ஐந்தாண்டு பதவிக் காலம் முடிந்துவிட்டது. அதனால் தொடர்ந்து வழக்கை நடத்த எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'அதிமுகவின் பொதுக்குழு சர்ச்சை முதல் திமுகவின் வாரிசு அரசியல் வரை...' - சி.வி. சண்முகம் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details