தமிழ்நாடு

tamil nadu

'தி லெஜண்ட்' திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிடத் தடை... உயர் நீதிமன்றம் உத்தரவு!

By

Published : Jul 27, 2022, 4:45 PM IST

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் நடித்து, நாளை (ஜூலை 28) திரைக்கு வரவுள்ள "தி லெஜண்ட்" படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The Legend movie  high court banned illegal release of The Legend movie  chennai high court  saravana stores  தி லெஜண்ட் திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை  தி லெஜண்ட்  உயர்நீதிமன்றம்
தி லெஜண்ட்

சென்னை:தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அதன் உரிமையாளர் அருள் சரவணன் கதாநாயகனாக நடித்து, "தி லெஜண்ட்" திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். ஊர்வசி ராவ்டேலா, கீத்திகா, பிரபு, விஜயகுமார், யோகி பாபு, விவேக், கோவை சரளா, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி உள்ள "தி லெஜண்ட்" திரைப்படம் 500 திரையரங்குகளில் உலகெங்கிலும் நாளை (ஜூலை 27) திரைக்கு வரவுள்ளது.

இந்தப்படத்தை அரசு மற்றும் தனியார் இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிடத்தடை விதிக்க வேண்டுமென 'தி லெஜண்ட்' சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, மிகுந்த பொருட் செலவில் படத்தை உருவாக்கி உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்று வாதிட்டார்.

இதையடுத்து, ’தி லெஜண்ட்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட 1,262 இணையதளங்களுக்கும், இணைய தள சேவை வழங்கும் 29 நிறுவனங்களுக்கும் தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'நறுமுகையே' பாடலைப்பாடிய சீனப்பெண் - இன்ஸ்டாவில் பகிர்ந்த இசைப்புயல்!

ABOUT THE AUTHOR

...view details